அசாமில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஸ்கூட்டர் பரிசு
இந்தியாவில் அசாம் மாநிலத்தில் 12ம்.,வகுப்பு பொதுத்தேர்வு எழுதி அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவியர்களுக்கு ஸ்கூட்டரை பரிசாக வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. டாக்டர் பனிகாந்தா சுகாதி விருது திட்டத்தின் கீழ் இந்த பரிசு வழங்கப்படவுள்ளது. அதன்படி வரும் நவம்பர் 30ம் தேதி 60%க்கு மேல் மதிப்பெண் எடுத்த 30,209 மாணவிகள் மற்றும் 75%க்கு மேல் மதிப்பெண் எடுத்த 5,566 மாணவர்களுக்கும் மொத்தம் 35,775 மாணவ-மாணவியர்களுக்கு ஸ்கூட்டர் அளிக்கப்படவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இத்தகவலை அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சரான ஜெயந்த மல்லா பருவா தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, நவம்பர் 29ம் தேதி 10ம் வகுப்பு பொது தேர்வில் 75%க்கு மேல் மதிப்பெண் எடுத்த 27,183 மாணவர்களுக்கு ரூ.15,000 ரொக்கப்பரிசு வழங்கப்படவுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்கூட்டர் பரிசு
#Assam Class 12 Students To Receive #Scooters On Nov 30. Assam Govt has announced that boy students who secured 75% & above, & girl students who secured 60% & above in Class XII exam conducted by AHSEC to be provided scooters under Dr Banikanta Kakati Award scheme on 30 Nov 2023. pic.twitter.com/uDmNHOm7CW— GPlus (@guwahatiplus) November 1, 2023