ஞானவாபி மசூதி தொடர்பான அறிக்கையை தொல்லியல் துறை சமர்ப்பித்தது
இந்திய தொல்லியல் துறை, இன்று (டிசம்பர் 18), ஞானவாபி மசூதி வளாகத்தில் நடத்தப்பட்ட தனது அறிவியல் ஆய்வு அறிக்கையை வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட கவரில் சமர்ப்பித்தது. வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகம் குறித்த ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க ஏஎஸ்ஐக்கு நீதிமன்றம் நீட்டிப்பு வழங்கிய ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை டிசம்பர் 21-ம் தேதி மனுதாரர்களுடன் பகிரப்பட்டு, அதன் நகல் பின்னர் உச்ச நீதிமன்றத்துக்கும் அனுப்பப்படும். வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்குப் பக்கத்தில் அமைந்துள்ள ஞானவாபி மசூதி, 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த மசூதியும், அதன் வளாகமும், இந்துக் கோயிலின் முன்பு இருந்த கட்டமைப்பில் கட்டப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க, ASI அறிவியல் ஆய்வு மேற்கொண்டது.