
ஆட்சி அமைக்க போவது யார்: கிங் மேக்கர்களாக உருவெடுக்கும் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு
செய்தி முன்னோட்டம்
2024 மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறாததால், NDA மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான எண்ணிக்கையை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
அதனையடுத்து, அந்த இரு கூட்டணிகளும் தனித்தனியே இன்று முக்கிய கூட்டங்களை நடத்த உள்ளன.
பாஜக தலைமையிலான NDA, 543 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 294 இடங்களைப் பெற்றுள்ளது.
எனவே, பெரும்பான்மை எணிக்கையான 272ஐ விட தற்போது NDAவிடம் 22 தொகுதிகள் அதிமாக உள்ளன.
அதே நேரத்தில், இண்டியா கூட்டணி கட்சிகளிடம் 234 இடங்கள் உள்ளன. இது பெரும்பான்மையை விட 38 இடங்கள் குறைவாகும்.
எனவே, இரண்டு NDA கூட்டணிக் கட்சிகளான சந்திரபாபு நாயுடுவின் டிடிபி மற்றும் நிதிஷ் குமாரின் ஜேடியு ஆகியவை கிங் மேக்கர்களாக மாறியுள்ளன.
இந்தியா
ஒரே விமானத்தில் டெல்லிக்கு சென்ற தேஜஸ்வி யாதவ்-நிதிஷ் குமார்
சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் எந்த கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறார்களோ அந்த கூட்டணி கட்சிகள் தான் இந்தியாவில் ஆட்சி அமைக்க முடியும்.
அந்த இரு கட்சிகளும் பாஜக கூட்டணியில் நின்று வெற்றி பெற்றிருந்தாலும், அவைகளை இண்டியா கூட்டணி பக்கம் இழுக்க காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன.
பெரும்பான்மையைப் பெறுவதற்கு, இண்டியா கூட்டணிக்கு ஜேடியு மற்றும் டிடிபி ஆகிய இரண்டு கட்சிகளின் ஆதரவும், அணிசேரா எம்பிக்களின் ஆதரவும் தேவை.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் டெல்லிக்கு சென்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
ஆச்சர்யப்படும் வகையில் இண்டியா கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவரான தேஜஸ்வி யாதவ் சென்ற அதே விமானத்தில் நிதிஷ் குமாரும் டெல்லிக்கு சென்றுள்ளார்.