அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் நீட்டிப்பு மனுவை விசாரிக்க மறுத்தது உச்ச நீதிமன்றம்
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் பெறப்பட்ட இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரிய அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மதுபான கொள்கையை இயற்றி செயல்படுத்தும் போது டெல்லி அரசாங்கம் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த ஊழலில் கிடைத்த பணத்தை ஆம் ஆத்மி கட்சி கோவா சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தியதாகவும் அக்கட்சி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இட்னஹ் பிரச்சனை தொடர்பாக மார்ச் 21 அன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜூன் 1ஆம் தேதி முடிவடைகிறது கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன்
அவரது இல்லத்தில் ED குழு விரிவான விசாரணை நடத்தியதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இது டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு கணிசமான பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரங்களை நடத்த அவருக்கு 7 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜூன் 1ஆம் தேதி அவரது ஜாமீன் முடிய உள்ள நிலையில், மேலும் 7 நாட்கள் இடைக்கால ஜாமீன் கோரி கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை இன்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.