
பிரதமரின் பாதுகாப்புக்கு பொறுப்பான பாதுகாப்பு குழுவின் இயக்குநர் அருண்குமார் சின்ஹா காலமானார்
செய்தி முன்னோட்டம்
பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு பொறுப்பான சிறப்புப் பாதுகாப்புக் குழுவின்(SPG) இயக்குநர் அருண்குமார் சின்ஹா உடல்நலக்குறைவால் இன்று(செப்-6) காலமானார்.
1988ஆம் ஆண்டு கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக முதன்முதலில் தனது பணியை தொடங்கிய சின்ஹாவுக்கு சமீபத்தில் ஓராண்டு நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இந்தியப் பிரதமர், முன்னாள் பிரதமர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு முழு பாதுகாப்பையும் வழங்கும் பணி SPGயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமரின் அலுவலகம், குடியிருப்பு, அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுப்பயணங்களின் போது SPG பாதுகாப்பை வழங்கி வருகிறது.
நாட்டில் நிலவும் பாதுகாப்புச் சூழல் மற்றும் நாடுகடந்த பயங்கரவாதத்திலினால் ஏற்படும் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, SPG குழு தங்களது பாதுகாப்பை நவீனமயமாக்கி, மேற்படுத்த வேண்டும். அதுவே அவர்களது முக்கிய பணியாகும்.
ட்விட்டர் அஞ்சல்
SPGயின் இயக்குநர் அருண்குமார் சின்ஹா காலமானார்
Arun Kumar Sinha, SPG Director passes away
— ANI Digital (@ani_digital) September 6, 2023
Read @ANI Story | https://t.co/UZsNHcOAOQ#SPG #SpecialProtectionGroup #Security pic.twitter.com/4pBYLpgDwS