
மணிப்பூரில் 3 வெடி குண்டுகளை செயலிழக்க செய்தது இந்திய ராணுவம்
செய்தி முன்னோட்டம்
மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் இந்திய இராணுவம் மூன்று மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை(IEDs) வெற்றிகரமாக செயலிழக்க செய்தது என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் இன்று தெரிவித்தார்.
46 கிமீ தொலைவுக்கு அப்பால் அமைந்துள்ள நோங்டாம் மற்றும் இத்தம் ஆகிய இரு வேறு கிராமங்களை இணைக்கும் சாலையில் அந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கையின் போது இந்த IEDகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் அமித் சுக்லா மேலும் கூறியுள்ளார்.
IEDகளை கவனித்த ராணுவ வீரர்கள் விரைந்து செயல்பட்டு அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.
இதையடுத்து, ஒரு வெடிகுண்டு செயலிழக்கும் குழு அந்த இடத்திற்கு வந்து, IEDகளை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்து, உயிர் இழப்பு மற்றும் உள்ளூர் மக்களுக்கு காயம் ஏற்படுவதைத் தடுத்தது
மணிப்பூர்
இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத மணிப்பூர்
பள்ளத்தாக்கில் ஆதிக்கம் செலுத்தும் மெய்தே சமூகத்தினருக்கும், மலை பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே மோதல்கள் வெடித்த ஒரு வருடத்திற்கு பிறகும் மணிப்பூர் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
குறிப்பாக இம்பால் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள அடிவாரங்களுக்கு அருகில், அந்த இரண்டு சமூகங்களும் சந்திக்கும் முக்கியமான பகுதிகளை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம், மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள ஒரு பாலம் மூன்று நடுத்தர அளவிலான குண்டு வெடிப்புகளால் சேதமடைந்தது.
வெளி மணிப்பூர் மக்களவைத் தொகுதியில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இது நடந்தது.