
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு மர்ம நபரிடம் இருந்து கொலை மிரட்டல்; காவல்துறை பாதுகாப்பு
செய்தி முன்னோட்டம்
சமீபத்தில் சென்னையில் கொலை செய்யப்பட்ட BSP கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை 5ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார்.
அவரது கொலை தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலை செய்ததாக சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், சதீஷ் என்ற பெயரில் ஒரு மர்ம கடிதம் வந்துள்ளது.
அந்த கடிதத்தில் ஆம்ஸ்ட்ராங் குழந்தையை கடத்தி அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் மனைவி குடும்பத்தோடு வசிக்கும் பெரம்பூர் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மிரட்டல் கடிதம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
கொலை மிரட்டல்
#JUSTIN | ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல்#Armstrong | #BSPArmstrong | #TNPolice pic.twitter.com/r1YCAOYmPE
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) August 4, 2024