Page Loader
"ED என்னை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைத்திருக்க முடியும். இது ஒரு மோசடி": நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்
பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலின் காவலை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க அமலாக்க இயக்குனரகம் கோரியுள்ளது

"ED என்னை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைத்திருக்க முடியும். இது ஒரு மோசடி": நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 28, 2024
03:31 pm

செய்தி முன்னோட்டம்

வியாழக்கிழமை, டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தனது வழக்கை வாதிட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்க இயக்குனரகத்தின் நோக்கம், ஆம் ஆத்மி கட்சியை நசுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆறு நாள் ED காவல் முடிவடைந்த பின்னர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கெஜ்ரிவால், இப்போது திரும்பப் பெறப்பட்ட மதுபானக் கொள்கை வழக்கில் அவரை சிக்க வைப்பதே ED-இன் ஒரே குறிக்கோள் என்றார். "ED இன் ரிமாண்ட் மனுவை நான் எதிர்க்கவில்லை. ED என்னை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் காவலில் வைக்கலாம். ஆனால் இது ஒரு மோசடி" என்று டெல்லி முதல்வர் கூறினார். பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலின் காவலை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க அமலாக்க இயக்குனரகம் கோரியுள்ளது.

மதுபான கொள்கை வழக்கு

காரணமின்றி கைது நடைபெற்றதாக கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபான ஊழல் செய்ததாக ED குற்றம் சுமத்தியதையடுத்து, பணத்தின் தடயம் குறித்து கேள்வி எழுப்பினார். "ரூ. 100 கோடி மதுபான ஊழல் நடந்தால், அந்த பணம் எங்கே? ED இன் விசாரணைக்குப் பிறகுதான் உண்மையான ஊழல் தொடங்கியது" என்று கெஜ்ரிவால் கூறினார். கெஜ்ரிவால், EDயால் தம்மைக் கைது செய்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறினார். "நான் கைது செய்யப்பட்டேன். எந்த நீதிமன்றமும் என்னை குற்றவாளி என்று நிரூபிக்கவில்லை. சிபிஐ 31,000 பக்கங்களையும், ED 25,000 பக்கங்களையும் தாக்கல் செய்துள்ளது. நீங்கள் அவற்றை ஒன்றாகப் படித்தாலும், நான் ஏன் கைது செய்யப்பட்டேன் என்பதற்கு எந்த காரணமும் இல்லை" எனக்கூறினார்.