
ஏ.ஆர் ரஹ்மான் இசைநிகழ்ச்சி எதிரொலி: இரண்டு காவலதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
செய்தி முன்னோட்டம்
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் நடத்திய 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி, மோசமான ஏற்பாடுகளில் கண்டனங்களை ஈர்த்தது.
இதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை பலரும் வறுத்தெடுத்து வரும் நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய காவல்துறையினரையும் பொதுமக்கள் கண்டித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, சென்னை (கிழக்கு), சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் இணை ஆணையர் திஷா மிட்டல் மற்றும், பள்ளிக்கரணை, தாம்பரம் கோட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் துணை ஆய்வாளரான தீபா சத்யன் ஆகிய இருவரையும், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இசை நிகழ்ச்சியின் போது, பொதுமக்கள் மட்டுமின்றி, பனையூர் அருகே வசிக்கும் முதல்வர் ஸ்டாலினின் காண்வாய்-உம் கூட்ட நெரிசலில் சிக்கியதும், இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுக்க காரணமாகியுள்ளது
embed
தமிழக அரசு நடவடிக்கை
#BREAKING | ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியில் குளறுபடி - தமிழ்நாடு அரசு நடவடிக்கை #ARRConcert | #ARRahman | #TNPolice | #TNGovt pic.twitter.com/FiiMV8bzdq— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) September 12, 2023