கருணாநிதி பேனா நினைவு சின்ன கட்டுமானத்தினை ஒருங்கிணைக்க அதிகாரி நியமனம்
செய்தி முன்னோட்டம்
முன்னாள் முதல்வரும் திமுக கட்சித்தலைவருமான கருணாநிதி அவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஏற்கனவே ஓர் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.
எனினும்,கடலுக்குள் 134அடி உயரத்திற்கு பேனா நினைவு சின்னம் ஒன்றினை ரூ.81கோடி செலவில் அமைக்க திமுக அரசு திட்டம் வகுத்து வருகிறது.
இந்த பிரம்மாண்ட நினைவுச்சின்னத்திற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் பேனா நினைவுச்சின்னம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கு பல தரப்புகளில் இருந்து ஒருபக்கம் எதிர்ப்புகள் வந்தாலும், தமிழக அரசு இதற்கான கட்டுமான பணிகளை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில் கலைஞரின் நினைவு மண்டபம் மற்றும் பேனா நினைவுச்சின்னம் கட்டுமானப்பணிகளை ஒருங்கிணைக்க சிறப்பு அதிகாரியினை நியமனம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
அதன்படி,ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் விஸ்வநாதன் சிறப்பு அதிகாரியாக தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN
— News7 Tamil (@news7tamil) May 24, 2023
"கருணாநிதி நினைவிடம் மற்றும் பேனா நினைவுச் சின்ன கட்டுமானப் பணிகளை ஒருங்கிணைக்க சிறப்பு அதிகாரி நியமனம்;
சிறப்பு அதிகாரியாக ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் விஸ்வநாதன் நியமனம்"
- தமிழ்நாடு அரசு உத்தரவு#TamilNadu | #PenStatue | #Officer | #TNGovt |…