இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
கடந்த ஆண்டு இந்தியாவின் ஹாட் டாபிக் ஆப்பிள் தான். இந்தியாவில் முதல் முறையாக தங்களது ரீடெய்ல் ஸ்டோர்களை கடந்த வாரம் தான் திறந்தது ஆப்பிள்.
ஆப்பிள் எந்த விஷயத்தைச் செய்தாலும் அது ப்ரீமியமாகத் தான் இருக்கும் என்ற மனநிலை பலருக்குமே உண்டு.
அந்த வகையில் ஆப்பிள் இந்திய ரீடெய்ல் ஸ்டோர் ஊழியர்களைப் பற்றிய சில தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.
மும்பையின் ஆப்பிள் பிகேசி மற்றும் டெல்லியின் ஆப்பிள் சாக்கெட் ஆகிய இரண்டு ஸ்டோர்களிலும் சேர்த்து 170 பணியாளர்களை பணியமர்த்தியிருக்கிறது ஆப்பிள்.
இந்த ஊழியர்கள் இந்தியாவின் பல்வேறு மாநில வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் வகையில் 15-க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசும் திறனுடன் இருக்கின்றனர்.
ஆப்பிள்
எவ்வளவு சம்பளம்?
இதெல்லாம் தெரிந்த விஷயம் தானே என்கிறீர்களா? இந்த ஆப்பிள் ஸ்டோர்களில் பணிபுரியும் பணியாளர்கள் BE, B.Tech, MBA முடித்தவர்கள்.
இவர்களுக்கு மாத சம்பளமாக 1 லட்சம் ரூபாய் கொடுக்கிறது ஆப்பிள். மற்ற நிறுவனங்களின் ஸ்டோர்களில் பணிபுரியும் பணியாளர்களை விட இது 3 முதல் 4 சதவிகிதம் அதிகம்.
இந்த பணியாளர்களில் சிலர் கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கான தகுதியாக ஆப்பிள் குறிப்பிட்டிருப்பது, சரளமாக உரையாடவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும், ஆப்பிள் பொருட்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும், ஆப்பிள் பொருட்களில் ஏற்படும் சின்னச் சின்ன பழுதுகளையும் ரிப்பேர் செய்யக் கற்றுக் கொள்ளும் திறன் இருக்க வேண்டும் என்பது தான்.