தஞ்சை பெரிய கோவிலில் ஆடை கட்டுப்பாடுகள் அறிவிப்பு
தஞ்சாவூர் மாநிலத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்திப்பெற்ற தஞ்சை பெரிய கோவில். இக்கோவிலுக்கு தினந்தோறும் வெளிமாநிலம் மட்டுமின்றி வெளிநாடு சுற்றுலாப்பயணிகளும், பக்தர்களும் வருவர். இந்நிலையில், அறநிலையத்துறை மற்றும் அக்கோவிலின் அரண்மனை தேவஸ்தானம் ஒன்றிணைந்து ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு குறித்த அறிவிப்புப்பலகையினை நேற்று முன்தினம் வைத்துள்ளனர். அதன்படி, ஆண்கள் வேஷ்டி-சட்டை அல்லது பேண்ட்-சட்டை அணிந்துக்கொண்டு உள்ளே வரலாம் என்றும், பெண்கள் புடவை, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார், தாவணி உள்ளிட்டவைகளை அணிந்து உள்ளே வரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், அரைக்கால் டவுசர், லெக்கின்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை அணிந்து கோயிலுக்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வருவோர் முகம் சுழிக்கும் வகையில் ஆடைகளை அணிந்து வருவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.