முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏகே ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி பாஜகவில் சேர்ந்தார்
செய்தி முன்னோட்டம்
காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி இன்று(ஏப் 6) பாஜகவில் இணைந்தார்.
கேரளாவைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் அணில் ஆண்டனி கடந்த ஜனவரி மாதம், பிரதமர் நரேந்திர மோடி பற்றிய பிபிசியின் ஆவணப்படம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து காங்கிரஸில் இருந்து விலகினார்.
பாஜக தலைவர்கள் பியூஷ் கோயல், வி.முரளிதரன் மற்றும் அக்கட்சியின் கேரள பிரிவு தலைவர் கே.சுரேந்திரன் ஆகியோர் அணில் ஆண்டனியை இன்று முறையாக தங்கள் கட்சிக்கு வரவேற்றனர்.
"ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களும் ஒரே ஒரு குடும்பத்திற்காக உழைக்கிறார்கள். ஆனால் நான் நாட்டுக்காக உழைப்பதாக நம்புகிறேன். இந்தியாவை முன்னேற்றுவதில் பிரதமர் மோடி தொலை நோக்குடன் செயல்படுகிறார்." என்று ஆண்டனி கூறியுள்ளார்.
இந்தியா
அனில் ஆண்டனியின் தந்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆவர்
அனில் ஆண்டனி கேரள காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதற்கு முன்பு கட்சியின் சமூக வலைதளப் பிரிவை நடத்தி வந்தார்.
காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுவதற்கு முன், அவர் பிபிசி ஆவணப்படத்தை "இந்தியாவுக்கு எதிரானது" என்று குறிப்பிட்டார்.
அனில் ஆண்டனியின் தந்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தார். மேலும், அவர் காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார்.
அதனால், அனில் ஆண்டனி பாஜகவில் இணைந்தது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாகும்.
அனில் ஆண்டனி குறிப்பாக கிறிஸ்தவர்களின் ஆதரவை கேரளாவில் பெறுவார் என்று பாஜக எதிர்பார்க்கிறது.
இடதுசாரியினரின் கோட்டையான கேரளாவை இதுவரை பாஜகவால் உடைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது