Page Loader
அலெக்சா மூலம் குரங்கை விரட்டியடித்த சிறுமிக்கு வேலை: ஆனந்த் மஹிந்திரா உறுதி
நிகிதா தனது படிப்பை முடித்ததும் மஹிந்திராவில் வேலை தருவதாக உறுதியளித்துள்ளார், ஆனந்த் மஹிந்திரா

அலெக்சா மூலம் குரங்கை விரட்டியடித்த சிறுமிக்கு வேலை: ஆனந்த் மஹிந்திரா உறுதி

எழுதியவர் Venkatalakshmi V
Apr 07, 2024
11:32 am

செய்தி முன்னோட்டம்

அலெக்சா துணைக்கொண்டு தங்களை தாக்க வந்த குரங்குகளிடம் இருந்து, தன்னையும், தனது மருமகனையும் காப்பாற்றிய சிறுமி நிகிதாவை பாராட்டி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ஒரு இடுகை இட்டுள்ளார். அதில், நிகிதா தனது படிப்பை முடித்ததும் மஹிந்திராவில் வேலை தருவதாக உறுதியளித்துள்ளார். நிகிதாவின் விரைவான சிந்தனைக்காகவும், துணிச்சலுக்காகவும் இந்த பரிசு என அவர் தெரிவித்துள்ளார். "அவர் நிரூபித்தது முற்றிலும் கணிக்க முடியாத தலைமைத்துவத்திற்கான பண்பு. அவள் படிப்பை முடித்த பிறகு, அவள் எப்போதாவது கார்ப்பரேட் உலகில் வேலை செய்ய முடிவு செய்தால், @MahindraRise இல் உள்ள நாங்கள் அவளை எங்களுடன் பணியாற்ற சம்மதிக்க வைக்க முடியும் என்று நம்புகிறேன்!" என பதிவிட்டுள்ளார்.

embed

ஆனந்த் மஹிந்திரா உறுதி

The dominant question of our era is whether we will become slaves or masters of technology. The story of this young girl provides comfort that technology will always be an ENABLER of human ingenuity. Her quick thinking was extraordinary. What she demonstrated was the... https://t.co/HyTyuZzZBK— anand mahindra (@anandmahindra) April 6, 2024

பின்கதை

வைரலான சிறுமியின் துணிச்சல் காரியம்

உத்திரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள சிறுமி நிகிதாவின் வீட்டிற்குள், அவர் தனது மருமகள் வாமிகாவுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​இந்த சம்பவம் நடந்துள்ளது. அவளின் மற்ற குடும்ப உறுப்பினர்கள் தனித்தனி அறைகளில் இருந்தபோது திடீரென, ஐந்து முதல் ஆறு குரங்குகள் கொண்ட கும்பல் வீட்டிற்குள் நுழைந்துள்ளது. சமையலறையில் நுழைந்து, பாத்திரங்கள் மற்றும் உணவுப் பொருட்களை தூக்கி வீசியது. அதில் ஒரு குரங்கு அவர்களை நெருங்கியதால் சிறுமிகள் பீதியடைந்துள்ளனர். உடனே நிகிதா ஃப்ரிட்ஜ் மேல் இருந்த அலெக்சா கருவியைக் கண்டறிந்து, நாய் குரைக்கும் சத்தத்தை இயக்கும்படி கட்டளையிட்டாள். குரல் கட்டளையைப் பெற்றவுடன், அலெக்சா உரத்த குரைக்கும் ஒலிகளை உருவாக்கியது. அதை கேட்ட குரங்குகள் பயந்து வெளியேறின. நிகிதாவின் துணிச்சலான இந்த செயல் வைரலாக பகிரப்பட்டது.