ஜூன் 8 ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தருகிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் ஜூன் 8ம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியின் 9-ஆண்டு கால சாதனைகளை நாடெங்கிலும் பறைசாற்றும் விதமாக, மே 30-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை, இந்தியா முழுவதிலும் பல மாநிலங்களில் சாதனை விளக்க பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தான், ஜூன் 8ம் தேதி தமிழகத்தின் வேலூரில் பொதுகூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு தலைமை தாங்கவே உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிறார். வேலூர் மாவட்டம், பள்ளிக்கொண்டா அருகே கந்தநேரியில் ஜூன் 8ம் தேதி மாலை கூட்டம் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பாதுகாப்பு ஆய்வுகளும், சோதனைகளும் நடைபெற்று வருகின்றன.