Page Loader
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர வாய்ப்பு

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர வாய்ப்பு

எழுதியவர் Sindhuja SM
Feb 27, 2024
06:59 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் குடியேறிய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று அண்டை நாடுகளைச் சேர்ந்த மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஆன்லைன் போர்ட்டல் தயார் நிலையில் இருப்பதாகவும், இதற்கான சோதனை ஓட்டங்களை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே செய்து வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆவணங்கள் இல்லாத அண்டை நாட்டு அகதிகளுக்கு CAA சட்டம் உதவும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீண்ட கால விசாக்களுக்கான விண்ணப்பங்கள் அதிகமாக பாகிஸ்தானில் இருந்து பெறப்பட்டுள்ளதாக அமைச்சகம்தெரிவித்துள்ளது.

இந்தியா 

 மாவட்ட அதிகாரிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் அதிகாரம் 

நீண்ட கால விசாக்களை வழங்குவதற்கான அதிகாரங்கள் ஏற்கனவே மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்திருக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க 30க்கும் மேற்பட்ட மாவட்ட நீதிபதிகள் மற்றும் ஒன்பது மாநில உள்துறைச் செயலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குடியுரிமைச் சட்டம், 1955ன் கீழ், இந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 1, 2021 முதல் டிசம்பர் 31, 2021 வரை, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 1,414 முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமைச் சட்டத்திற்கு கீழ் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டது என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கை கூறுகிறது.