Page Loader
மருத்துவ மாணவிகள் ஹிஜாப் அணிய ஐஎம்ஏ தலைவர் டாக்டர் சுல்பி நுஹு எதிர்ப்பு
மருத்துவ மாணவிகள் ஹிஜாப் அணிய ஐஎம்ஏ தலைவர் டாக்டர் சுல்பி நுஹு எதிர்ப்பு

மருத்துவ மாணவிகள் ஹிஜாப் அணிய ஐஎம்ஏ தலைவர் டாக்டர் சுல்பி நுஹு எதிர்ப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Jun 30, 2023
07:03 pm

செய்தி முன்னோட்டம்

கேரளாவில் ஆபரேஷன் தியேட்டரில் ஹிஜாப் அணிய வேண்டும் என்று இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவிகள் கோரிக்கை வைத்தனர். இதற்கு இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதன் கேரளா பிரிவு தலைவர் டாக்டர் சுல்பி நுஹு, ஆபரேஷன் தியேட்டரில் ஹிஜாபை விட, சுகாதாரமும், நோயாளியின் பாதுகாப்புதான் முக்கியம் என வலியுறுத்தி உள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், "உலகளவில் ஆபரேஷன் தியேட்டரில் பின்பற்றப்படும் நடைமுறையில் நோயாளிகளுக்கு பாதுகாப்பான சூழலுக்குதான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது". "அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் மருத்துவ நிபுணர்களுக்கு உலகளாவிய ஆடைக் குறியீடு உள்ளது மற்றும் அதை இந்திய மருத்துவ சங்கமும் கடைபிடிக்கிறது. நோயாளிகளின் பாதுகாப்பு ஒருபோதும் சமரசம் செய்யப்படாது." என்று கூறியுள்ளார்.

info about hijab controversy in kerala

மருத்துவ மாணவிகள் ஹிஜாப் அணிய கோரிக்கை விடுத்ததன் பின்னணி

ஜூன் 26 அன்று, திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் லைனெட் மோரிஸிடம், ஆபரேஷன் தியேட்டரில் ஹிஜாப் போன்ற உடைகளை அணிய அனுமதி கோரி ஏழு மருத்துவ மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆறு மாணவிகள் மற்றும் ஒரு மாணவன் இந்த கோரிக்கையை வைத்தனர். அதில், "எங்கள் மத நம்பிக்கைகளின்படி, முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாகும்". "ஹிஜாப் அணியும் பெண்கள், மருத்துவமனை மற்றும் அறுவை சிகிச்சை அறை விதிமுறைகளுக்கு இணங்கும்போது சிரமம் ஏற்படுவதால், ஹிஜாப் போன்ற நீண்ட கை ஸ்க்ரப் ஜாக்கெட்டுகள் மற்றும் அறுவை சிகிச்சை உடைகளை அணிய அனுமதிக்க வேண்டும்." என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை குறித்து 10 நாட்களுக்குள் விவாதித்து முடிவெடுப்பதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.