மகாராஷ்டிராத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் அரசியல் திருப்புமுனைகள், டெல்லிக்கு விரையும் சரத் பவார்
சென்ற வாரத்தில், மகாராஷ்டிரா அரசியலில் பல திடீர் மாற்றங்கள் ஏற்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான அஜித் பவார், பா.ஜ.க கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்ததில் துவங்கிய இந்த அரசியல் ட்ராமா, நேற்று அதன் ஆன்டி-கிளைமாக்ஸ் காட்சியை எட்டியது. அதன்படி, ஒருபுறம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அஜித் பவார் தனது பலத்தை நிரூபிக்க, தனது ஆதரவு MLA க்களை கூட்ட, மறுபுறம், சரத் பவாரும் அவரது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், தலைமையே அதிர்ந்துபோகும் அளவிற்கு, மொத்தம் இருந்த 53 எம்எல்ஏக்களில், அஜித் பவருக்கு 40 MLAக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனை அடுத்து, கட்சியின் சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருக்கிறார் NCPயின் மூத்த தலைவர் அஜித் பவார்.
கட்சியின் தலைமையாக தான் இருக்கப்போவதாக கூறும் அஜித் பவார்
கட்சியின் பெரும்பான்மை ஆதரவு தனக்கு இருப்பதை உறுதி செய்த அஜித் பவார், கட்சி நிர்வாகிகள், தன்னை கட்சியின் தலைமையாக ஏற்றுக்கொள்வதாக, கலகம் துவங்கும் முன்னரே, அதாவது ஜூன் 30 ஆம் தேதியே தனக்கு கடிதம் அனுப்பியதாக அவர் மேலும் தெரிவித்தார். 1999ஆம் ஆண்டு சரத் பவாரால் ஆரம்பிக்கப்பட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து, அவரையே ஓய்வு எதுத்துக்கொள்ளும்படி அஜித் பவார் மேலும் தெரிவித்தார். தற்போது, தனது ஆதரவு MLA க்களை, மும்பையிலிருக்கும் ஒரு ஹோட்டலில் தங்க வைத்துள்ளார் அஜித் பவார். தேர்தல் ஆணையத்திடம் முறைப்படி கடிதமும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதனிடையே, சரத் பவார், டெல்லி விரைந்துள்ளதாக தெரிகிறது. தனது ஆதரவாளர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க அவர் சென்றுள்ளதாக கூறுகிறார்கள்.