சென்னை தலைமைச் செயலகத்தில் திடீர் அதிர்வு; என்ன நடந்தது?
சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் இன்று காலை திடீரென அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் பதற்றத்துடன் வெளியேறினர். தலைமைச் செயலகத்தின் நாமக்கல் கவிஞர் மாளிகையில் பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இன்று காலை அங்கே பணியாற்றும் ஊழியர்கள் திடீரென அதிர்வினை உணர்ந்தனர். மேலும் முதல் தளத்தில் உள்ள தரையில் சத்தத்துடன் விரிசல் ஏற்பட்டது. இதனால், பயந்த ஊழியர்கள் மாளிகையிலிருந்து அடித்துபிடித்து வெளியேறினர். இதனால் அங்கே பதற்ற நிலை ஏற்பட்டது.
Twitter Post
உடனடியாக ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர் EV வேலு
விரிசல் சம்பவம் நிகழ்ந்ததும் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ வேலு அந்த இடத்தினை நேரில் வந்து ஆய்வு செய்தார். இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறையினர், இது சாதாரண விரிசல்தான் என்றும், ஊழியர்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்தனர். பின்னர் சம்பவம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: "14 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட டைல்ஸ், அப்போது சிறிய வடிவங்களில் தயாரிக்கப்பட்டன. இது சாதாரண ஏர் கிராக். கட்டிடத்தில் விரிசல் இல்லை. பொறியாளர்களுடன் ஆய்வு செய்ததில், கட்டிடம் உறுதியாக உள்ளது. எனினும், ஏர் கிராக் உள்ள இடங்களில் பழைய டைல்ஸ்களை அகற்றி புதியவை போட ஆணையிட்டுள்ளேன். எனவே, அச்சப்பட வேண்டாம்," என்றார்.