Page Loader
அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை பரிசோதிக்க விரையும் எய்ம்ஸ் குழு 
அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை பரிசோதிக்க விரையும் எய்ம்ஸ் குழு

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை பரிசோதிக்க விரையும் எய்ம்ஸ் குழு 

எழுதியவர் Nivetha P
Jun 14, 2023
11:44 am

செய்தி முன்னோட்டம்

கடந்த மாதம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அதனையடுத்து, நேற்று(ஜூன்.,13) காலை சென்னையில் உள்ள அவரின் இல்லத்திலும், அவரின் சகோதரர் இல்லத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர். அதனை தொடர்ந்து, தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனையானது நேற்று நடத்தப்பட்டது. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இதனிடையே அவரது அறையிலிருந்து 3 பைகளில் இருந்த ஆவணங்களை அவர்கள் எடுத்துள்ளனர் என்று தெரிகிறது. கிட்டத்தட்ட 17 மணிநேரம், நள்ளிரவு வரை தொடர்ந்த இந்த சோதனைக்கு பிறகு அதிகாரிகள், செந்தில் பாலாஜியை விசாரணை செய்வதற்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

அமைச்சர் 

ஓமந்தூரார் மருத்துவமனைக்கு விரையும் எய்ம்ஸ் மருத்துவ குழு 

அப்போது செந்தில் பாலாஜி திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். அதனால் உடனே அவரை சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என்று செய்திகள் வெளியானது. அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகிறார்கள். செந்தில் பாலாஜிக்கு எடுக்கப்பட்ட இசிஜி, ஆக்சிஜன் அளவு, ரத்தஅழுத்தம் ஆகியவற்றுள் அவரது இருதயத்துடிப்பில் மாறுபாடு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இவரது உடல்நிலையினை பரிசோதிக்க மத்திய அரசு சுகாதாரத்துறை கட்டுப்பாட்டிலுள்ள எய்ம்ஸ் மருத்துவக்குழு ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அவர்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே, அவருக்கு மேல்சிகிச்சையளிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவாரா அல்லது சென்னை மருத்துவமனையிலேயே சிகிச்சைப்பெறுவாரா என்பதனை அமலாக்கத்துறை முடிவு செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.