LOADING...
தமிழகத்தின் 'கோடீஸ்வர' வேட்பாளர், TVK ஆதவ் அர்ஜுனாவின் உறவினரா?
தமிழகத்தின் 'கோடீஸ்வர' வேட்பாளர், TVK ஆதவ் அர்ஜுனாவின் உறவினர், லீமா ரோஸ்

தமிழகத்தின் 'கோடீஸ்வர' வேட்பாளர், TVK ஆதவ் அர்ஜுனாவின் உறவினரா?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 07, 2026
11:16 am

செய்தி முன்னோட்டம்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் போட்டியிடும் லீமா ரோஸ், தமிழகத்திலேயே மிக அதிக சொத்து மதிப்புள்ள வேட்பாளராக உருவெடுத்துள்ளார். இவர் அதிமுக சார்பாக போட்டியிடுகிறார். 'லாட்டரி அதிபர்' என்று அழைக்கப்படும் மார்ட்டினின் மனைவியான இவர் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. அது மட்டுமின்றி அவர் எதிரணியில் இருக்கும் TVK முக்கிய தலைவரான ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்பது கூடுதல் சுவாரசியம்.

சொத்து விவரம்

லீமா ரோஸின் ஆயிரம் கோடி சொத்து விவரம்

'லாட்டரி மன்னன்' என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டினின் மனைவியான லீமா ரோஸ், தனது வேட்புமனுவில் அசையும் சொத்துக்களாக 139.62 கோடி ரூபாயும், அசையா சொத்துக்களாக 909.94 கோடி ரூபாயும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டும் 1,000 கோடி ரூபாயைத் தாண்டுகிறது. தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரு பெண் வேட்பாளர் இவ்வளவு பெரிய தொகையை சொத்து மதிப்பாக அறிவிப்பது இதுவே முதல்முறை எனக் கருதப்படுகிறது.

ஒட்டுமொத்த சொத்து

குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்து மலை

லீமா ரோஸின் கணவர் சாண்டியாகோ மார்ட்டின் பெயரில் 3,262.01 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், 887.36 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளன. அதேபோல் இவர்களது மகன் ஜோஸ் டைசன் மார்ட்டின் பெயரில் 225.56 கோடி ரூபாய் அசையும் சொத்துக்களும், 439.21 கோடி ரூபாய் அசையா சொத்துக்களும் இருப்பதாக அந்த உறுதிமொழிப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மார்ட்டின் குடும்பத்தின் சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடிகளைத் தொடுகிறது.

Advertisement

உறவு

TVK ஆதவ் அர்ஜுனாவுடன் உறவு

"லாட்டரி மன்னன்" சாண்டியாகோ மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், லால்குடி அதிமுக வேட்பாளராக களமிறங்கிய நேரத்தில், அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனா, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) முக்கிய தலைவராக வில்லிவாக்கத்தில் போட்டியிடுகிறார். ஒரே குடும்பத்தில் மாமியாரும் மருமகனும், இரு வேறு காட்சிகளில் போட்டியிடுவதால் இந்த தேர்தல் உற்று நோக்கப்படுகிறது.

Advertisement