Page Loader
மீண்டும் ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
மீண்டும் ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

மீண்டும் ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

எழுதியவர் Nivetha P
Sep 24, 2023
02:57 pm

செய்தி முன்னோட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் ஒவ்வொரு முறையும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லுகையில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுகிறார்கள் அல்லது விரட்டியடிக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் 400 விசைப்படகுகள் மீன்வளத்துறையினரிடம் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல அனுமதி பெற்றுள்ளது. அதன்படி 100 விசைப்படகுகள் நேற்று(செப்.,23) காலை மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது, 7 இலங்கை கடற்படை கப்பல்கள் கச்சத்தீவு பகுதியில் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தெரியவந்த நிலையில், 300 படகுகளுக்கு பதில் வெறும் 50 படகுகள் மட்டும் கடலுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

மீன்

இந்த விவகாரம் குறித்து மீனவர் ஒருவர் வேதனை 

இதனுள் ஓர் பிரிவினர் இந்திய எல்லைப்பகுதியினை ஒட்டிய கச்சத்தீவு பகுதியில் வலை விரித்து மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிகிறது. இதனையடுத்து, அவர்கள் ராமேஸ்வரம் மீனவர்களை தாக்கி விரட்டியதும் இல்லாமல், படகுகளில் இறங்கி அவர்களது வலைகளை வெட்டி சேதப்படுத்தினர் என்று கூறப்படுகிறது. மேலும் அவர்கள், தொடர்ந்து இப்பகுதியில் மீன்பிடித்தால் சிறைபிடிப்போம் என்று மிரட்டியதால் அச்சமுற்ற மீனவர்கள் மீன் பிடிக்காமல் உடனே கரைக்கு வந்தடைந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து மீனவர் ஒருவர், "ஒவ்வொரு முறையும் ரூ.25ல் இருந்து 50 ஆயிரம் வரை செலவு செய்து தான் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறோம். ஆனால் இலங்கை கடற்படை இவ்வாறு மீன்பிடிக்க விடாமல் விரட்டியடிப்பதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது" என்று வேதனை தெரிவித்துள்ளார்.