NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் குட்கா போன்ற புகையிலை பொருட்களுக்கு தடை குறித்து ஆலோசனை கூட்டம் 
    தமிழகத்தில் குட்கா போன்ற புகையிலை பொருட்களுக்கு தடை குறித்து ஆலோசனை கூட்டம் 
    இந்தியா

    தமிழகத்தில் குட்கா போன்ற புகையிலை பொருட்களுக்கு தடை குறித்து ஆலோசனை கூட்டம் 

    எழுதியவர் Nivetha P
    April 27, 2023 | 01:42 pm 0 நிமிட வாசிப்பு
    தமிழகத்தில் குட்கா போன்ற புகையிலை பொருட்களுக்கு தடை குறித்து ஆலோசனை கூட்டம் 
    தமிழகத்தில் குட்கா போன்ற புகையிலை பொருட்களுக்கு தடை குறித்து ஆலோசனை கூட்டம்

    சென்னையில் இன்று(ஏப்ரல்.,27) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு மாநிலத்தில் குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை குறித்து மாவட்ட சுகாதார அலுவலர்களுடன் நாளை(ஏப்ரல்.,27) ஆலோசனை கூட்டம் நடத்தப்படவுள்ளது. அந்த கூட்டத்தில் குட்கா விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படும். அதன்படி குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை பற்றி தகவல்கள் கொடுத்தால் அதற்கான உரிய சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் தருபவர்களின் ரகசியமும் காக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். கடந்த 2006ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தின் கீழ், தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவிட்டார்.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது 

    அதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் இந்த உத்தரவானது நீட்டிக்கப்பட்டு வருவது வழக்கம். இதற்கிடையே இதற்கு நிரந்தரமாக தடைவிதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு குறித்த அனைத்து விசாரணைகளும் முடிந்த பின்னர் நீதிபதிகள் மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தின் படி, புகையிலை பொருட்களுக்கு முழு தடை விதிக்க விதிகள் வகுக்கவில்லை. புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும், விளம்பரங்களை ஒழுங்குபடுத்தவும் மட்டுமே மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறினர் என்பது குறிப்பிடவேண்டியவை. மேலும் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மா.சுப்ரமணியம் கூறுகையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. எனவே மக்கள் அச்சப்படத்தேவையில்லை. தொற்று பரவலை கையாள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை
    தமிழ்நாடு
    கொரோனா

    சென்னை

    கோடை காலம் என்பதால் வழக்கறிஞர்கள் கவுன் அணிவதில் விலக்கு - சென்னை உயர்நீதிமன்றம்  சென்னை உயர் நீதிமன்றம்
    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எச்சரிக்கை  ரயில்கள்
    சென்னை கலாஷேத்ரா விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை உயர் நீதிமன்றம்
    தொடர்ச்சியாக உயரும் தங்கம் விலை - இன்றைய விலை விபரம்!  வணிக செய்தி

    தமிழ்நாடு

    தமிழ்நாடு ரேஷன் கடைகளில் ஆவின் - புதிய வசதிகள் அறிமுகம்  தமிழக அரசு
    சமூக வலைத்தளங்களில் பரவிய ஆடியோ பதிவு குறித்து விளக்கமளிக்கும் நிதியமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    உதயநிதி, சபரீசனிடம் இருந்து என்னைப் பிரிக்க முயற்சிக்கிறார்கள்: ஆடியோ சர்ச்சை பற்றி பேசிய PTR  உதயநிதி ஸ்டாலின்

    கொரோனா

    இந்தியாவில் ஒரே நாளில் 9,355 கொரோனா பாதிப்பு: 26 பேர் உயிரிழப்பு  இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 9,629 கொரோனா தொற்று: நேற்றைவிட 44% அதிகரிப்பு  இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 6,934 கொரோனா பாதிப்பு: 24 பேர் உயிரிழப்பு இந்தியா
    தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா; சுற்றுலாத்தலங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை கொடைக்கானல்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023