LOADING...
2026 டி20 உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு - சூர்யகுமார் யாதவ் தலைமையில் புதிய படை
2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

2026 டி20 உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு - சூர்யகுமார் யாதவ் தலைமையில் புதிய படை

எழுதியவர் Sekar Chinnappan
Dec 20, 2025
02:54 pm

செய்தி முன்னோட்டம்

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஆல்ரவுண்டர் அக்ஷர் படேல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 2024 இல் உலகக்கோப்பையை வென்ற பிறகு ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜேடேஜா ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில், இளம் வீரர்களைக் கொண்ட இந்த புதிய அணி மகுடத்தைத் தக்கவைக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது.

முக்கிய வீரர்கள்

அணியின் முக்கிய வீரர்கள் மற்றும் தேர்வுகள்

அணியில் அதிரடி தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பர் இடத்திற்கு சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். பந்துவீச்சு துறையில் அனுபவமிக்க ஜஸ்பிரித் பும்ராவுடன் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் வேகப்பந்து வீச்சை கவனிப்பார்கள். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் எதிரணிகளுக்குச் சவால் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணி

முழு வீரர்களின் பட்டியல்

பிப்ரவரி 7, 2026 அன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் அமெரிக்காவை இந்திய கிரிக்கெட் அணி எதிர்கொள்கிறது. தொடர்ந்து பிப்ரவரி 12 இல் நமீபியாவுடன் மோதவுள்ளது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தனது சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்ட முதல் அணி என்ற சாதனையைப் படைக்க இந்தியா இலக்கு நிர்ணயித்து களமிறங்க உள்ளது. இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், வருண் சக்கரவர்த்தி, ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்ஷர் படேல் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரீத் பும்ரா.

Advertisement