கிரெட்டாவின் பழைய எதிரி மீண்டும் வருகிறது: 2026 ஜனவரியில் அதிரடி காட்டும் புதிய ரெனால்ட் டஸ்டர்
செய்தி முன்னோட்டம்
மிட்-சைஸ் எஸ்யூவி சந்தையில் கடந்த ஒரு தசாப்தமாக ஹூண்டாய் கிரெட்டா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால், இந்தத் துறைக்கே அடித்தளமிட்ட ரெனால்ட் டஸ்டர் மாடல் மீண்டும் இந்தியாவிற்கு வரவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிமுகம் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இதன் சோதனை ஓட்டங்கள் இந்தியச் சாலைகளில் தொடங்கிவிட்டன.
புதிய வடிவமைப்பு
புதிய வடிவமைப்பு மற்றும் நவீன வசதிகள்
புதிய தலைமுறை டஸ்டர், ஐரோப்பாவில் விற்பனை செய்யப்படும் 'டேசியா டஸ்டர்' (Dacia Duster) போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும். இதில் 'Y' வடிவிலான எல்இடி டிஆர்எல் (DRL) மற்றும் டெயில் லேம்ப்கள் இடம்பெறலாம். பழைய மாடலைப் போலவே பெட்டி போன்ற (Boxy) தோற்றத்துடன், வலுவான கிளாடிங்குகள் வழங்கப்படவுள்ளன. உட்புறத்தில் 10-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 360-டிகிரி கேமரா மற்றும் ஏடிஏஎஸ் (ADAS) போன்ற நவீன பாதுகாப்பு வசதிகள் இடம்பெற வாய்ப்புள்ளது.
என்ஜின்
என்ஜின் மற்றும் போட்டி
2026 டஸ்டரில் 1.2 லிட்டர் மைல்ட்-ஹைப்ரிட் அல்லது 1.6 லிட்டர் ஸ்டிராங்-ஹைப்ரிட் இன்ஜின்கள் வழங்கப்படலாம். மேலும், டஸ்டரின் அடையாளமான AWD (All-Wheel Drive) வசதி இதிலும் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தையில் இது ஹூண்டாய் கிரெட்டா மட்டுமின்றி, டாடா சியரா (Tata Sierra) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) ஆகியவற்றுக்கும் கடும் போட்டியாக அமையும். இதன் ஆரம்ப விலை சுமார் 11 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை (எக்ஸ்-ஷோரூம்) இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.