Page Loader
திருச்சி தொகுதியில் அதிமுகவிற்கு வெற்றியை பெற்று தருபவர்களுக்கு பரிசு: விஜயபாஸ்கர் 
2024 மக்களவை பொதுத்தேர்தலில் திருச்சி தொகுதியில் ப.கருப்பையா போட்டியிடுகிறார்

திருச்சி தொகுதியில் அதிமுகவிற்கு வெற்றியை பெற்று தருபவர்களுக்கு பரிசு: விஜயபாஸ்கர் 

எழுதியவர் Venkatalakshmi V
Apr 02, 2024
06:34 pm

செய்தி முன்னோட்டம்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், திருச்சி தொகுதியில், அதிமுகவின் வெற்றி பெற வைத்தால், நகர செயலாளருக்கு இன்னோவா காரும், வட்ட செயலாளருக்கு தங்க சங்கிலியும் பரிசாக அளிக்கப்படும் என அதிமுகவின் தலைவரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். 2024 மக்களவை பொதுத்தேர்தலில் திருச்சி தொகுதியில் அதிமுக சார்பில் ப.கருப்பையா போட்டியிடுகிறார். இவருக்கு பிரச்சாரம் செய்ய நேற்று திருச்சிக்கு வந்திருந்த விஜயபாஸ்கர் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கருப்பையாவிற்கு எதிராக திருச்சியில் மதிமுக சார்பில் துரை வைகோ, அமமுக சார்பாக செந்தில்நாதன் என கிட்டத்தட்ட 38 போட்டியாளர்கள் களம் காண்கின்றனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

embed

Twitter Post

#தேர்தல்Clicks | அதிமுகவுக்கு அதிக வாக்குகளை பெற்றுத் தருவோருக்கு பரிசு அறிவிப்பு!#SunNews | #ADMK | #ElectionsWithSunNews | @Vijayabaskarofl pic.twitter.com/3b5TW3uX0L— Sun News (@sunnewstamil) April 2, 2024