
வரும்..ஆனா வராது: அதிமுகவிற்கு பாஜக தலைவர்கள் மாறினார்களா?
செய்தி முன்னோட்டம்
இன்று மதியம் 2 மணியளவில் பாஜகவை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அதிமுகவில் இணைய போவதாக இன்று காலை, அதிமுகவின் எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் தெரிவித்தார்.
இதனை அடுத்து தேர்தல் களமே பரபரப்போடு காத்திருந்த நேரத்தில், சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, இது பற்றி கேட்டபொது,"நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. இதை யார் கூறினார்?" என ஆச்சரியத்தோடு வினவினார்.
அதற்கு பதில் அறிந்ததும்,"வந்தால் சந்தோஷம்தான். அவ்வாறு வருவதாக இருந்தால் சொல்லி அனுப்புகிறேன்" என பதிலளித்தார்.
முன்னதாக அம்மன் அர்ஜுனன், இந்த கட்சி தாவலை கிண்டலுக்காக சொல்லவில்லை என்றும், அந்த எம்.எல்.ஏ.க்கள் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் அல்லது தென் மாவட்டங்கள் இருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
குழப்பத்தில் அதிமுக தலைமை
#WATCH | “யார் உங்களுக்கு சொன்னது..”
— Sun News (@sunnewstamil) February 27, 2024
பாஜக எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் அதிமுகவில் இணைவதாக அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுன் கூறியது குறித்த கேள்விக்கு இ.பி.எஸ். ரியாக்ஷன்#SunNews | #EdappadiPalanisamy | #ADMK | #BJP pic.twitter.com/q5Q0H5Zfft