2024 மக்களவை தேர்தலை சந்திக்க 4 முக்கிய குழுக்கள் அமைத்த அதிமுக
செய்தி முன்னோட்டம்
எதிர்வரும் 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக அதிமுக அறிவித்த நிலையில், அக்கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், திமுக, மதிமுக உள்ளிட்ட காட்சிகள் தேர்தலுக்கான குழுக்களை அறிவித்தது.
தொடர்ந்து இன்று அதிமுகவும் தங்கள் கட்சி சார்பாக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகிய நான்கு குழுக்களை அறிவித்துள்ளது.
இது பற்றிய அறிவிப்பை, அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
தொகுதி பங்கீட்டிற்கான குழுவில், கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி, திண்டுக்கல் எஸ். சீனிவாசன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
4 முக்கிய குழுக்கள் அமைத்த அதிமுக
#ADMK appoints various committee's for the #ParliamentElections2024#Elections pic.twitter.com/6HO73hgvg5
— Suresh Kumar (@journsuresh) January 22, 2024