LOADING...
துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரி திமுக கூட்டணியிடம் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரும் EPS

துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரி திமுக கூட்டணியிடம் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 18, 2025
12:05 pm

செய்தி முன்னோட்டம்

துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்பிகளும் ம் கட்சி பேதமின்றி ஆதரவு வழங்க வேண்டுமெனஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) கோரிக்கை விடுத்துள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "மகாராஷ்டிரா மாநில ஆளுநராக உள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது தமிழகத்திற்கு ஒரு பெரும் பெருமை," என்றார்.

ஆதரவு

தமிழக MPக்களின் ஆதரவு வேண்டும் எனக்கோரும் EPS

EPS மேலும் கூறியதாவது: "மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி தேர்தலில்போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்பிக்களும், கட்சி பேதமின்றி, சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து, அவரை வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என்றார். இந்த வேண்டுகோள், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை நோக்கி அவர் விடுத்த அரசியல் வேண்டுகோளாகவும் பார்க்கப்படுகிறது. தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள தமிழக எம்பிக்களின் பெரும்பாலானவை திமுக தலைமையிலான INDIA கூட்டணியைக் சேர்ந்தவர்கள் என்பதால், இபிஎஸ் கூறிய வலியுறுத்தல் முக்கியத்துவம் பெறுகிறது.