நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் இணைந்தார்
செய்தி முன்னோட்டம்
பிரபல திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதுகுறித்து திமுக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மாண்புமிகு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், இன்று (19.1.2025) காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நடிகர் சத்யராஜ் அவர்களின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.
அப்போது, கழகப் பொருளாளர் திரு.டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் மாண்புமிகு திரு.கே.என்.நேரு, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் மாண்புமிகு திரு.பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்." என பதிவிட்டு, புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
திமுகவின் எக்ஸ் தள பதிவு
மாண்புமிகு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்,
— DMK (@arivalayam) January 19, 2025
இன்று (19.1.2025) காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நடிகர் சத்யராஜ் அவர்களின் மகளும் – ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.
அதுபோது, கழகப் பொருளாளர் திரு.டி.ஆர்.பாலு,… pic.twitter.com/uevzcDqCsq
திராவிடம்
சத்யராஜின் திராவிட பின்னணி
நடிகர் சத்யராஜ் தந்தை பெரியாரால் ஈர்க்கப்பட்டு பல்வேறு திராவிடக் கட்சிக் கூட்டங்களில் பலமுறை பேசியிருக்கிறார்.
இவரது மகன் சிபி திரைப்பட நடிகராகவும், மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராகவும் உள்ளனர். இவர்களில் திவ்யா கூடுதலாக, ல்வேறு சமூக முயற்சிகள் மற்றும் நிகழ்வுகளில் தீவிரமாக பங்கேற்று வருகிறார்.
பல்வேறு சமூக சமூக பணிகளுக்காக தனது அர்ப்பணிப்பை வழங்கி வந்த நிலையில், தற்போது அரசியல் ரீதியாக செயலாற்றும் முனைப்பில் திமுகவில் இணைந்துள்ளார்.
அவருக்கு திமுகவினர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.