NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மீண்டும் தலைவராக நடிகர் கமல்ஹாசன்; மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு ஒருமனதாக தேர்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மீண்டும் தலைவராக நடிகர் கமல்ஹாசன்; மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு ஒருமனதாக தேர்வு
    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக நடிகர் கமல்ஹாசன் மீண்டும் தேர்வு

    மீண்டும் தலைவராக நடிகர் கமல்ஹாசன்; மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு ஒருமனதாக தேர்வு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 21, 2024
    05:10 pm

    செய்தி முன்னோட்டம்

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் சனிக்கிழமை (செப்டம்பர் 21) தொடங்கி நடைபெற்று வருகிறது.

    2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி அமைத்து அந்த கட்சிக்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசன் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்தார்.

    இதற்கு பிரதிபலனாக மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்பட உள்ளது.

    இந்த தேர்தலுக்கு பிறகு நடக்கும் முதல் பொதுக்குழு கூட்டம் இது எனும் நிலையில், இதில் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

    இதற்கிடையே, இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் மீண்டும் கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    ஒரே நாடு ஒரே தேர்தல்

    ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த கமல்ஹாசன்

    இந்த கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது, குறைபாடுகள் நிறைந்தது என்றும் அதன் வடுக்கள் இன்னும் சில நாடுகளில் உள்ளன என்றார்.

    எனவே இந்தியாவுக்கு இது தற்போதும் தேவையில்லை, எதிர்காலத்திலும் தேவையில்லை என்று கூறினார்.

    மேலும், எந்தவொரு கட்சியையும் தலைவரையும் நேரடியாக குறிப்பிடாமல், 2014 அல்லது 2015ல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், சர்வாதிகாரம், பேச்சு சுதந்திரம் பறிபோய், ஒரு தலைவரின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்திருக்கும் என்று கமல்ஹாசன் கூறினார்.

    ஒரே நேரத்தில் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தபோது, ​​ஐரோப்பா மற்றும் ரஷ்யாவை கமல்ஹாசன் சுட்டிக்காட்டிய போதிலும், அது தோல்வியடைந்த எந்த ஒரு நாட்டையும் அவர் நேரடியாக குறிப்பிடவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கமல்ஹாசன்
    மக்கள் நீதி மய்யம்
    மக்கள் நீதி மய்யம்
    அரசியல் நிகழ்வு

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    கமல்ஹாசன்

    தக் லைஃப் ஷூட்டிங்கில் இணைந்த சிம்பு: BTS புகைப்படங்கள் வெளியானது! சிலம்பரசன்
    இந்தியன் 2 படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு  ஷங்கர்
    Thug Life: மே 8 அன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு  சிலம்பரசன்
    முதல்முறையாக Thug Life படத்தில் கமலுடன் நடிக்கிறார் சிம்பு; வெளியானது இன்ட்ரோ வீடியோ சிலம்பரசன்

    மக்கள் நீதி மய்யம்

    'ஒரு சின்னப்பிள்ளையை குறிவைக்கிறார்கள்': உதயநிதிக்கு கமல்ஹாசன் ஆதரவு திமுக
    மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்த சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள்  சிங்கப்பூர்
    மிக்ஜாம் புயலால் எண்ணெய் கசிவு ஏற்பட்ட எண்ணூர் பகுதியில் கமலஹாசன் ஆய்வு கமலஹாசன்
    கண்டிஷன்களுக்கு ஒத்துப்போகவில்லை என்றால் தனித்து போட்டி: ம.நீ.ம அறிவிப்பு மக்கள் நீதி மய்யம்

    மக்கள் நீதி மய்யம்

    கூட்டணி குறித்து பேச முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவுள்ளார் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்  கமல்ஹாசன்
    கூட்டணி குறித்து இரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்: ம.நீ.ம கட்சி தலைவர் அறிவிப்பு கமல்ஹாசன்
    திமுகவுக்கு கமல் ஹாசன் ஆதரவு: மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவிப்பு  திமுக

    அரசியல் நிகழ்வு

    'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு ஆதரவு தெரிவித்த குஷ்புவிற்கு கண்டனம் தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் தமிழ் நடிகை
    ஜூன் 8 ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தருகிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா அமித்ஷா
    வரலாற்று நிகழ்வு: பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை- பகுதி 1 இந்தியா
    அஜித் பவாருக்கு எதிராக தகுதி நீக்க மனுவை தாக்கல் செய்தது NCP மகாராஷ்டிரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025