Page Loader
"விபத்து வருத்தமளிக்கிறது; மீட்பு பணிகள் நடந்து வருகின்றன": மேற்கு வங்க ரயில் விபத்து குறித்து பேசிய பிரதமர் மோடி 

"விபத்து வருத்தமளிக்கிறது; மீட்பு பணிகள் நடந்து வருகின்றன": மேற்கு வங்க ரயில் விபத்து குறித்து பேசிய பிரதமர் மோடி 

எழுதியவர் Sindhuja SM
Jun 17, 2024
12:44 pm

செய்தி முன்னோட்டம்

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் இன்று காலை நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, நிலைமையை ஆய்வு செய்ய அதிகாரிகளுடன் பேசியுள்ளதாகவும், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவும் சம்பவ இடத்திற்குச் செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விபத்து சம்பவம் வருத்தமளிக்கிறது என்று கூறிய பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறினார். "மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்து வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்." என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்தியா 

இந்த விபத்தில் சிக்கி 8 பேர் பலி 

"அதிகாரிகளிடம் பேசி நிலைமையை கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில்வே அமைச்சர் ஸ்ரீ அஸ்வினி வைஷ்ணவ் ஜியும் விபத்து நடந்த இடத்திற்குச் செல்கிறார்." என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். மேற்கு வங்காளத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியதால் 8 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் இன்று காலை நடந்த இந்த விபத்தின் போது, கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது மோதிய சரக்கு ரயில் சிக்னலை மீறியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.