NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பால் பொருட்களை தொடர்ந்து, குடிநீர் விற்பனையில் இறங்குகிறது ஆவின் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பால் பொருட்களை தொடர்ந்து, குடிநீர் விற்பனையில் இறங்குகிறது ஆவின் 
    தினமும் 1 லட்சம் குடிநீர் பாட்டில்கள் விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    பால் பொருட்களை தொடர்ந்து, குடிநீர் விற்பனையில் இறங்குகிறது ஆவின் 

    எழுதியவர் Sindhuja SM
    May 21, 2023
    02:02 pm

    செய்தி முன்னோட்டம்

    பால் பொருட்களை தொடர்ந்து, குடிநீர் விற்பனையில் இறங்க தமிழகத்தின் ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    பால் உற்பத்தியில் வெற்றி பெற்றதை அடுத்து, மாநில கூட்டுறவு நிறுவனமான ஆவின், பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் வணிகத்தில் இறங்க உள்ளது.

    இதற்காக 1,00,000 பெட் பாட்டில்களை கொள்முதல் செய்ய ஆவின் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.

    ஒரு நாளைக்கு மேற்கூறிய எண்ணிக்கையில் பாட்டில்கள் விற்பனை செய்யப்படும் என முதற்கட்டமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் இனி குறைந்த விலையில் விற்கப்படும் என்று ஆவின் தெரிவித்துள்ளது.

    DETAILS

    ஆவின் குடிநீர் விற்பனை ஒப்பந்தம் அடிப்படையில் நடைபெற உள்ளது

    அது போக ஆவின் பால் பாக்கெட்டுகளிலும் மாற்றங்கள் கொண்டுவர இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதுவரை, பச்சை நிறத்தில் இருந்த ஆவின் பால் பாக்கெட்டான 'கிறீன் மாஜிக்', புதிய வடிவில் விற்கப்பட உள்ளது.

    மேலும், ஆவின் பால் பாக்கெட்டுகளின் நிறமும் மாற்றப்பட உள்ளதாக ஆவின் தெரிவித்துள்ளது.

    புதிதாக தொடங்கப்பட இருக்கும் ஆவின் குடிநீர் விற்பனை ஒப்பந்தம் அடிப்படையில் நடைபெற உள்ளது.

    குடிநீர் ஆலைகள் மற்றும் இயந்திரங்கள் வைத்திருப்பவர்களுடன் ஆவின் நிறுவனம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூட்டணி வைத்துக்கொள்ள இருக்கிறது.

    முதற்கட்டமாக, தினமும் 1 லட்சம் குடிநீர் பாட்டில்கள் விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழக அரசு

    சமீபத்திய

    மனிதர்களின் மனநிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் ஏஐ சாட்பாட்கள்; ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல் செயற்கை நுண்ணறிவு
    பெண்களிடையே அதிகரித்து வரும் தைராய்டு கோளாறுகள்; அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் தைராய்டு
    ஜூன் 2025இல் இந்தியாவில் முன்பதிவைத் தொடங்குகிறது வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனம் மின்சார வாகனம்
    மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக பங்கேற்ற தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்

    தமிழ்நாடு

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆவின் அமைக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்  சென்னை
    மோக்கா புயல் இன்றிரவு தீவிரமான புயலாக மாறும்: தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  மோக்கா
    திமுக அமைச்சரைவை மாற்றத்துக்கு இது தான் காரணம்: எடப்பாடி கே பழனிசாமி குற்றச்சாட்டு எடப்பாடி கே பழனிசாமி
    தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பிற்காக 66 லட்சம் பேர் காத்திருப்பு  கல்லூரி மாணவர்கள்

    தமிழக அரசு

    டி.எம்.சவுந்தர ராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் பெயரில் ஒரு சாலை: தமிழக அரசு அறிக்கை கோலிவுட்
    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்தி கார்த்தி
    தமிழகத்தில் பெண்கள் உரிமை தொகை ரூ.1000 குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் எடப்பாடி கே பழனிசாமி
    ஆவின் தயிர் பாக்கெட்டில் 'தஹி' என குறிப்பிட கூறிய உத்தரவை வாபஸ் பெற்ற ஒன்றிய அரசு மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025