
'சந்திராயன்-3' திட்டத்தில் மூளையாக செயல்பட்ட தமிழர் - விஞ்ஞானி வீரமுத்துவேல்
செய்தி முன்னோட்டம்
நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள உலகநாடுகள் முயற்சித்து வரும் நிலையில், இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் இந்த'சந்திராயன்'திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
இதன் ஓர் முக்கிய நிகழ்வாக இன்று(ஆகஸ்ட்.,23)மாலை நிலவின் தென்துருவத்தில் 'சந்திரயான் 3' தரையிறங்கவுள்ளது.
இத்திட்டத்தின் மூளையாக செயல்பட்டவர் தான் 'சந்திராயன்-3' இயக்குனரான வீரமுத்துவேல். இவர் தமிழ்நாடு மாவட்டம் விழுப்புரத்தினை சேர்ந்தவராவார்.
ரயில்வே ஊழியர் பழனிவேல் என்பவரது மகனான வீரமுத்துவேல் கடந்த 1978ம்ஆண்டு பிறந்துள்ளார்.
தனது பள்ளி படிப்பினை விழுப்புரம் ரயில்வே பள்ளியில் முடித்த இவர், பாலிடெக்னிக்கில் பொறியியல் துறையில் படித்து பட்டம் பெற்றுள்ளார்.
பின்னர் திருச்சி REC-கல்லூரியில் முதுகலை பட்டம் படித்த இவர், 2004ம்ஆண்டு முதல் இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார் என்று கூறப்படுகிறது.
இவர் 'சந்திராயன்-2'திட்டத்திலும் முக்கிய பங்கினை வகித்துள்ளார்.
விண்கலம்
2019ம் ஆண்டில் 'சந்திராயன்-3' திட்ட இயக்குனரானார் வீரமுத்துவேல்
தொடர்ந்து, 2016ம் ஆண்டு விண்கலத்தின் மின்னணு பொதியில் ஏற்படும் அதிர்வுகளை கட்டுக்குள் கொண்டுவருவது எவ்வாறு என்பது குறித்த ஆய்வு கட்டுரை ஒன்றினை வழங்கினார்.
அந்த கட்டுரை மீதான ஆய்வு பெங்களூர் யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மையத்தில் வைத்து சோதனை செய்யப்பட்டுள்ளது.
அந்த சோதனையின் முடிவில், இவரது இந்த தொழில்நுட்பம் ரோவரை இயக்கவும், லேண்டரை நிலவில் சரியாக தரையிறக்கவும் பெரிதும் உதவும் என்பது தெரியவந்தது.
அதன் பின்னரே இவர் 2019ம் ஆண்டில் 'சந்திராயன்-3' திட்ட இயக்குனரானார்.
இந்நிலையில் இவரது கண்காணிப்பில் உருவாக்கப்பட்ட 'சந்திராயன்-3' வெற்றிகரமாக செயல்பட்டு வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
'சந்திராயன்-1', 'சந்திராயன்-2' மற்றும் 'சந்திராயன்-3' என மூன்றிலும் தமிழ்நாடு மாவட்டத்தினை சேர்ந்தோரே இயக்குனராக பணியாற்றியுள்ளது தமிழர்களுக்கு பெருமையளித்துள்ளது.