திருட வந்த இளைஞர்களை ஓட ஓட விரட்டிய 80 வயது முதியவர், குவியும் பாராட்டுக்கள் : க்ரைம் ஸ்டோரி
இந்தவார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி:தமிழ்நாடு-திருவாரூர் முத்துப்பேட்டை அருகேயுள்ள ஜாம்பவான் ஓடை பகுதியினை சேர்ந்தவர் வைரக்கண்ணு(80). தனிமையில் வசிக்கும் இவருக்கு வருமானம் என்று ஒன்று தனியே இல்லையாம். வெளியூர்களில் இவரது பிள்ளைகள் வேலை செய்து அனுப்பும் சிறியத்தொகை கொண்டே இவர் தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பகுதியில் கொள்ளை சம்பவங்கள் அதிகமாம். இதன் காரணமாக தனிமையில் வசிக்கும் வைரக்கண்ணு எப்பொழுதுமே தனது வீட்டினை உள்பக்கம் தாலிட்டு தான் வைத்திருப்பார் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே இவரது வீட்டினை நேற்று(அக்.,21)இரவு 4 இளைஞர்கள் கொண்ட கொள்ளையடிக்கும் கும்பல் சூழ்ந்து சுற்றிவளைத்துள்ளது. முதலில் இதனை அறியாத வைரக்கண்ணு, சிறிதுநேரத்திற்கு பின்னர் சுதாரித்துக்கொண்டு தனது தற்காப்பிற்காக அரிவாள் ஒன்றினை எடுத்து தனது அருகில் வைத்துக்கொண்டுள்ளார்.
கொள்ளையர்களை அரிவாளால் தாக்கிய முதியவருக்கு குவியும் பாராட்டுக்கள்
அவர் சந்தேகித்தபடியே, ஒருவர்பின் ஒருவராக 4 பேர் அவரது வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அதனைக்கண்ட முதியவர் அரிவாள் கொண்டு அவர்களை தாக்கியுள்ளார். பயத்தில் வலிதாங்காமல் அலறிய கொள்ளையர்கள் சத்தம்கேட்டு அப்பகுதியினர் கூடியதையடுத்து, கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்த காவல்துறை வைரக்கண்ணு வீட்டினை ஆய்வுச்செய்து திருட்டு மேற்கொள்ள முயற்சி செய்திருப்பதை உறுதி செய்து வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்து கொண்டிருக்கையில், இளைஞர் ஒருவர் அரிவாள் வெட்டுப்பட்டு சிகிச்சை பெறுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அங்கு விரைந்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்துள்ளனர். அதன்படி மற்ற 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவத்தில் தைரியமாக கையாண்ட முதியவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.