Page Loader
உத்தரகாண்டில் 23 பேருடன் சென்ற டெம்போ பள்ளத்தாக்கில் விழுந்ததால் 12 பேர் பலி

உத்தரகாண்டில் 23 பேருடன் சென்ற டெம்போ பள்ளத்தாக்கில் விழுந்ததால் 12 பேர் பலி

எழுதியவர் Sindhuja SM
Jun 15, 2024
02:51 pm

செய்தி முன்னோட்டம்

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இன்று 23 பயணிகளுடன் சென்ற ஒரு டெம்போ டிராவலர் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் அலகநந்தா நதிக்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்த உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், "காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பாபா கேதாரைப் பிரார்த்திக்கிறேன்," என்று அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

டெம்போ பள்ளத்தாக்கில் விழுந்ததால் 10 பேர் பலி