Page Loader
70 வயது மூதாட்டியை மரத்தடியால் அடித்து கொலை செய்த பேரன் கைது

70 வயது மூதாட்டியை மரத்தடியால் அடித்து கொலை செய்த பேரன் கைது

எழுதியவர் Sindhuja SM
Jan 23, 2024
12:10 pm

செய்தி முன்னோட்டம்

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் 70 வயது மூதாட்டியை குடிபோதையில் இருந்த அவரது பேரன் மரக் கம்பியால் அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. ஜவ்ஹர் தாலுகாவின் உம்பர்வாடி கிராமத்தில் நேற்று இரவு அந்த பெண் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர். "தர்மவீர் வாசே என்ற 23 வயது இளைஞன் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​​தனது பாட்டி ஆனந்தி டோக்ரே தனக்குள் முணுமுணுத்துக் கொண்டிருப்பதைக் கேட்டு எரிச்சல் அடைந்தான்." என்று ஜவ்ஹர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டக்ஜ்வ்கிய 

மூதாட்டியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது

"அந்த ஆத்திரத்தில் அவன் மூதாட்டியை மரக் கம்பியால் தாக்கி சம்பவ இடத்திலேயே கொன்று விட்டான்" என்றும் ஜவ்ஹர் காவல் நிலைய அதிகாரி கூறியுள்ளார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் குற்றவாளியை கைது செய்தனர். சம்பவத்தின் போது குற்றம் சாட்டப்பட்டவர் மது போதையில் இருந்தார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302 (கொலை) கீழ் குற்றம் பதிவு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.