NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவண்ணாமலையில் சாலை விபத்து- 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருவண்ணாமலையில் சாலை விபத்து- 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி
    மஹாளய அமாவாசையை முன்னிட்டு கர்நாடகாவில் இருந்து மேல்மலையனூருக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தவர்கள் விபத்தில் சிக்கினார்.

    திருவண்ணாமலையில் சாலை விபத்து- 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி

    எழுதியவர் Srinath r
    Oct 15, 2023
    11:21 am

    செய்தி முன்னோட்டம்

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே காரும் லாரியும் மோதிக்கொண்ட சாலை விபத்தில், 3 குழந்தைகள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    மஹாளய அமாவாசையை முன்னிட்டு, நேற்று மேல்மலையனூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய கர்நாடகாவில் இருந்து ஒரே காரில் 8 பேர் வந்துள்ளனர்.

    இவர்கள் சாமி தரிசனம் முடித்துவிட்டு இன்று காலை கர்நாடகம் திரும்பி உள்ளனர்.

    திருவண்ணாமலை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் என்ற பகுதியில் புறவழிச்சாலையில் அதிவேகமாக சென்ற கார் எதிரே திருவண்ணாமலை நோக்கி வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    2nd card

    அப்பளம் போல் நொறுங்கிய கார்

    இந்த விபத்தில், அதிவேகமாக சென்ற கார் லாரியின் அடியில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் கார் ஓட்டுநர், 3 பெண்கள், மற்றும் 3 குழந்தைகள் என 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும் படுகாயம் அடைந்த ஒரு பெண், ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

    விபத்து கார் ஓட்டுனரின் தூக்க கலக்கத்தில் நடைபெற்றதா இல்லை வேறு எதுவும் காரணமா என செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருவண்ணாமலை
    கர்நாடகா
    பெங்களூர்
    மருத்துவமனை

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாட்டம் பர்வதமலை
    பர்வதமலையில் சாலை மற்றும் ரோப் கார் வசதி அமைக்க திட்டம் - ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு பர்வதமலை
    பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு
    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் காவல்துறை

    கர்நாடகா

    பள்ளி பாடபுத்தங்களில் இருந்து RSS நிறுவனரின் அத்தியாயங்களை நீக்கியது கர்நாடக அரசு காங்கிரஸ்
    கர்நாடக முதல்வர் பதவிக்கு அடித்து கொள்ளும் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமாரின் விசுவாசிகள்  டி.கே.சிவகுமார்
    மனைவியுடன் கள்ளத்தொடர்பு: நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தத்தை குடித்த கணவன் இந்தியா
    பெங்களுரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு  பெங்களூர்

    பெங்களூர்

    பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலையின் சுங்கக் கட்டணம் 22 சதவீதம் உயர்வு இந்தியா
    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம், பெங்களுருவில் கூடும் என சரத் பவார் அறிவிப்பு  எதிர்க்கட்சிகள்
    பெங்களூர் கால்பந்து கிளப் அணியுடனான ஒப்பந்தத்தை மேலும் ஒரு வருடம் நீட்டித்தார் சுனில் சேத்ரி கால்பந்து
    லிவ்-இன் டூகெதர் காதலியை கொலை செய்து சினிமா பாணியில் மறைக்க முயன்ற காதலன் - க்ரைம் ஸ்டோரி  கைது

    மருத்துவமனை

    ஒரே நாளில் 6 முறை இதயத்துடிப்பு நின்றுபோன மாணவர்: காப்பாற்றிய மருத்துவர்கள் இங்கிலாந்து
    டிஸ்சார்ஜ் ஆனார் செந்தில் பாலாஜி - மீண்டும் புழல் சிறையில் அடைப்பு  செந்தில் பாலாஜி
    மருத்துவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுத்த தமிழக மருத்துவமனைகள் கேரளா
    மதுரை அரசு மருத்துவமனை - குடும்பநல அறுவை சிகிச்சைகளை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டம்  அரசு மருத்துவமனை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025