NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் 610 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் XBB1.16 கொரோனா வகை
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் 610 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் XBB1.16 கொரோனா வகை
    அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 164 கொரோனா(XBB1.16) பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

    இந்தியாவில் 610 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் XBB1.16 கொரோனா வகை

    எழுதியவர் Sindhuja SM
    Mar 28, 2023
    01:33 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், XBB1.16 என்ற கொரோனா வகை 610 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதுவே கொரோனா அதிகரித்து வருவதற்கு காரணமாக இருக்கலாம் என்று SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு (INSACOG) தரவுகள் கூறுகின்றன.

    INSACOG தரவுகளின்படி, அதிகபட்சமாக மகாராஷ்டிராவிலும் குஜராத்திலும் தலா 164 கொரோனா (XBB1.16) பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

    தெலுங்கானாவில் 93 பாதிப்புகள் மற்றும் கர்நாடகாவில் 86 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

    இந்தியா

    மிக வேகமாக பரவி வரும் கொரோனா பாதிப்பு

    மிக வேகமாக பரவும் தொற்றுநோயாகக் கருதப்படும் XBB 1.16 கொரோனா மாறுபாடு, இந்தியாவில் முதன்முதலாக 2023 ஜனவரி மாதத்தில் கண்டறியப்பட்டது. அப்போது, இந்தியாவில் இருவர் இந்த வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

    பிப்ரவரியில், 140 பேர் இதனால் பாதிக்கப்பட்டனர். மார்ச் மாதத்தில் 468 பாதிப்புகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.

    நேற்று(மார் 27) வெளியிடப்பட்ட சுகாதார அமைச்சக தரவுகளின்படி, இந்தியாவில் 1,805 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    அதே நேரத்தில் செயலில் உள்ள வழக்குகள் 134 நாட்களுக்குப் பிறகு 10,000-ஐத் தாண்டியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: ஒரே நாளில் 1590 பாதிப்புகள் கொரோனா
    இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை தமிழ்நாடு
    ஹோண்டா மற்றும் டிவிஸ் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்! எலக்ட்ரிக் வாகனங்கள்

    கொரோனா

    கொரோனா தடுப்பு: மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு! இந்தியா
    விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா: சந்தைக்கு வரும் தடுப்பு மருந்து! இந்தியா
    சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று தொற்று
    அடுத்த 40 நாட்களுக்குள் கொரோனா அதிகரிக்கும்: மத்திய சுகாதாரத்துறை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025