போலி செய்திகளை பரப்பி வந்த 6 யூடியூப் சேனல்கள் அதிரடி முடக்கம்; மத்திய அரசு அதிரடி
போலியாக செய்தி பரப்பி வந்த 6 யூடியூப் சேனல்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கியுள்ளது. இந்தியாவில், தேர்தல் நாடாளுமன்றம் மற்றும் சுப்ரீம் கோர்டு நடைமுறைகள், அரசின் இயக்கம் போன்ற போலியான தகவல்களை பரப்பி வருவதாக 6 யூடியூப் சேனல்கள் மீது புகார்கள் கூறப்படு வந்தன. இதுதொடர்பாக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஊடக தகவல் மையத்தின் உண்மை கண்டறியும் குழுவினர்கள் விசாரணையை தொடர்ந்தனர். விசாரணையில், நேஷன் டிவி, சம்வாத் டிவி , சரோகர் பாரத், நேஷன்24, ஸ்வர்னிம் பாரத் மற்றும் சம்வாத் சமாச்சார்., போன்ற இந்த சேனல்கள் பொய்யான செய்திகளை பரப்பி வந்தது தெரியவந்தது. இது மட்டுமின்றி இந்த சேனல்கள் சுமார் 20 லட்சம் சந்தாதார்களை கொண்டுள்ளனர்.
6 யூடியூப் சேனல்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கியது
இவர்கள் வெளியிடும் வீடியோக்கள் 51 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது. இதன்பின்னர், அரசின் முக்கிய நிறுவனங்கள் தொடர்பாக போலியான தகவல்களை பரப்பிய இந்த 6 சேனல்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கியுள்ளது. இதற்கு முன்னதாக இதுபோன்று தவறான தகவல்களை பரப்பி வந்த 3 யூடியூப் சேனல்களை தடை செய்ய கடந்த மாதமும் யூடியூப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.