பீகாரின் பெகுசராய் பகுதியில் ஆட்டோ ரிக்ஷா மீது கார் நேருக்கு நேர் மோதியதால் 6 பேர் பலி
பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இன்று காலை, ஐந்து பேரை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ரிக்ஷா ஒன்று ஹதிதா சந்திப்பில் இருந்து பெகுசராய் நோக்கி பயணித்த போது இந்த விபத்து நடந்தது. அந்த ஆட்டோ, ஒரு கார் மீது நேருக்கு நேர் மோதியதில், ஆட்டோவில் இருந்த 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.