Page Loader
கொசுவர்த்தி சுருள் மெத்தையில் விழுந்து விபத்து: மூச்சுத் திணறலால் 6 பேர் பலி
போலீசார், காயமடைந்தவர்களை ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனையில் சேர்த்தனர்.

கொசுவர்த்தி சுருள் மெத்தையில் விழுந்து விபத்து: மூச்சுத் திணறலால் 6 பேர் பலி

எழுதியவர் Sindhuja SM
Mar 31, 2023
01:03 pm

செய்தி முன்னோட்டம்

கொசுவர்த்தி சுருள் மெத்தையில் விழுந்ததால் வெளியான விஷ வாயுவை சுவாசித்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் டெல்லியில் உள்ள வீட்டில் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். வடகிழக்கு டெல்லியில் உள்ள சாஸ்திரி பார்க் பகுதியில் இந்த குடும்பம் வசித்து வந்தது. மச்சி மார்க்கெட் அருகே மசார் வாலா சாலையில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக சாஸ்திரி பார்க் காவல் நிலையத்துக்கு இன்று(மார் 31) காலை அழைப்பு வந்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பாதிக்கப்பட்டவர்களை ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்தியா

மூச்சுத் திணறல் காரணமாக மரணம் அடைந்த 6 பேர்

"இரவில் மெத்தையின் மீது எரியும் கொசுவர்த்தி சுருள் விழுந்திருக்கிறது. அதனால் ஏற்பட்ட நச்சுப் புகையால் வீட்டுக்குள் இருந்தவர்கள் சுயநினைவை இழக்க நேரிட்டது. பின்னர் மூச்சுத் திணறல் காரணமாக அவர்கள் மரணம் அடைந்தனர்." என்று வடகிழக்கு மாவட்ட டிசிபி ஜாய் டிர்கி கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்பது பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். அதில் இருவர் தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் முதலுதவிக்குப் பிறகு நலமாக இருக்கிறார். சம்பவத்தின் போது வீட்டுக்குள் இருந்த ஒரு குழந்தை, நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.