Page Loader
வீட்டு அலமாரிக்குள் கண்டெடுக்கப்பட்ட மும்பை பெண்ணின் உடல்
21 வயதான இறந்த பெண்ணின் மகள், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

வீட்டு அலமாரிக்குள் கண்டெடுக்கப்பட்ட மும்பை பெண்ணின் உடல்

எழுதியவர் Sindhuja SM
Mar 15, 2023
01:30 pm

செய்தி முன்னோட்டம்

மும்பையின் லால்பாக் பகுதியில் வீணா பிரகாஷ் ஜெயின்(53) என்ற பெண்ணின் உடல் பிளாஸ்டிக் பைக்குள் இன்று(மார் 15) கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உடல் பல மாதங்களாக அலமாரியில் வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 21 வயதான வீணாவின் மகள், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இறந்த பெண்ணின் சகோதரரும் மருமகனும் வீணாவை காணவில்லை என்று கலாசௌகி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து இந்த விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. முதல் மாடியில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் சோதனையிட்டபோது, ​​பிளாஸ்டிக் பைக்குள் வீணாவின் உடல் பாகங்கள் அழுகிய நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியா

ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கு

அழுகி போன உடலுடன் அதே வீட்டில் வாழ்ந்து வந்த வீணாவின் மகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் இறந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மேலும், பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் அவர்களது வீடுகளில் கண்டெடுக்கப்பட்ட பல சம்பவங்கள் கடந்த சில மாதங்களில் பதிவாகியுள்ளன. டெல்லியின் ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கில், 28 வயதான ஆப்தாப் பூனாவாலா தனது வாழ்க்கைத் துணையை கொன்று, அந்த பெண்ணின் உடல் பாகங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.