தமிழ்நாட்டில் 5 IAS அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள், அவர்களின் பதவிகளில் உயர்வு பெற்றுள்ளனர். அதில், அமுதா, அபூர்வா, காகர்லா உஷா உள்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகள், கூடுதல் தலைமைச் செயலராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இது குறித்து வெளியான அரசு அறிவிப்பில், கடந்த 1994ம் ஆண்டு தமிழ்நாட்டின் பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகளாக பணியாற்றும் பி.அமுதா (வருவாய்த் துறை செயலர்), அதுல் ஆனந்த்(குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை செயலர்), சுதீப் ஜெயின்(மத்திய அரசுப்பணியில், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை கூடுதல் செயலர்), காகர்லா உஷா(வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர்), மற்றும் அபூர்வா (வேளாண் துறை செயலர்) ஆகியோர், செயலர் நிலையைத் தாண்டி தலைமைச் செயலர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.