Page Loader
வங்காள விரிகுடாவில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; கொல்கத்தா மற்றும் பிற இடங்களில் உணரப்பட்டது 
வங்காள விரிகுடாவில் (Bay of Bengal) 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது

வங்காள விரிகுடாவில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; கொல்கத்தா மற்றும் பிற இடங்களில் உணரப்பட்டது 

எழுதியவர் Venkatalakshmi V
Feb 25, 2025
08:14 am

செய்தி முன்னோட்டம்

செவ்வாய்க்கிழமை காலை வங்காள விரிகுடாவில் (Bay of Bengal) 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது. காலை 6:10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசாவின் பூரி அருகே நிலநடுக்கம் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். அவரின் கூற்றுப்படி வங்காள விரிகுடாவில் 91 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அட்சரேகை 19.52 N மற்றும் தீர்க்கரேகை 88.55 E இல் பதிவானதாக அவர் மேலும் கூறினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

நிலநடுக்கம்

கடந்த வாரம் டெல்லியில் உணரப்பட்ட நிலநடுக்கம்

கொல்கத்தா நில அதிர்வு மண்டலம் III இல் வருகிறது. அதாவது இந்த நகரம் மிதமான பூகம்ப அபாயத்தை எதிர்கொள்கிறது. வடகிழக்கு இந்தியா, இமயமலை அல்லது குஜராத் போன்ற இடங்களைப் போல பெரிய நிலநடுக்கங்களுக்கு இந்நகரம் ஆளாகவில்லை என்றாலும், அவ்வப்போது நடுக்கங்கள் லேசாக உலுக்குகிறது. இவை கொல்கத்தாவின் கீழ் நேரடியாக ஏற்படும் பிளவுகளிலிருந்து அல்ல, மாறாக வங்காள விரிகுடா, நேபாளம் அல்லது வடகிழக்கு இந்தியா போன்ற அருகிலுள்ள பகுதிகளில் ஏற்படும் நில அதிர்வுகளிலிருந்து வருகின்றன. கடந்த வாரம் தலைநகர் டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 17 திங்கட்கிழமை ரிக்டர் அளவுகோலில் மிதமான 4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி புது டெல்லிக்குள் அமைந்திருந்ததால் மிகவும் தீவிரமாக உணரப்பட்டது.