Page Loader
10ல் 3 பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புகின்றனர்: ஆய்வில் தகவல்
தொழில் முனைவோரில் 60% பெண்கள் பட்டதாரி பட்டம் பெற்றவர்களாக இருக்கின்றனர்.

10ல் 3 பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புகின்றனர்: ஆய்வில் தகவல்

எழுதியவர் Sindhuja SM
Mar 21, 2023
06:43 pm

செய்தி முன்னோட்டம்

ஒரு புதிய கணக்கெடுப்பின்படி, தொழிலில் முனையும் பெண்களில் 57% பேர் 26 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கின்றனர். மேலும், 27% பேர் 36 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இந்த பெண்களில் பெரும்பான்மையானவர்கள் படித்தவர்களாகவும், 60% பேர் குறைந்தபட்சம் பட்டதாரி பட்டம் பெற்றவர்களாகவும் இருக்கின்றனர். பிரான்சைஸ் இந்தியா நடத்திய ஆய்வில், இந்தியாவில் 10 பெண்களில் 3 பேர் தொழில் முனைவோர் பதவியை ஏற்க விரும்புவதாக தெரியவந்துள்ளது. 45% பெண் தொழில்முனைவோர், திருமணமானவர்களாக இருக்கின்றனர். அவர்கள், தங்கள் குடும்பப் பொறுப்புகளையும் வேலையையும் சமமாக பேணுவதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இந்தியா

கல்வி, அழகு மற்றும் சுகாதாரத் தொழில்களை தேர்ந்தெடுக்கும் பெண்கள்

டெல்லி, குருகிராம், போபால், லூதியானா, லக்னோ, கவுகாத்தி, பெங்களூரு, கோவா, ஜெய்ப்பூர் மற்றும் புனே ஆகிய முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில், 500 பெண்கள் கலந்து கொண்டனர். பல பெண்கள் தங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்க ஆர்வம் காட்டுவதாக இந்த ஆய்வு கூறுகிறது. பெரும்பாலான பெண் தொழில்முனைவோர், சேவை மற்றும் சில்லறை வணிகத் துறைகளில் கவனம் செலுத்துவதாகவும், கல்வி, அழகு மற்றும் சுகாதாரத் தொழில்கள் மிகவும் பிரபலமான விருப்பமாக இருப்பதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.