Page Loader
ஹரியானாவில் 70 பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து: 40 பேர் காயம் 

ஹரியானாவில் 70 பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து: 40 பேர் காயம் 

எழுதியவர் Sindhuja SM
Jul 08, 2024
10:00 am

செய்தி முன்னோட்டம்

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் இன்று காலை குழந்தைகள் சென்ற பள்ளி பேருந்து கவிழ்ந்ததால் 40க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர். இந்த விபத்து பிஞ்சோரின் நௌல்டா கிராமத்திற்கு அருகே நடந்துள்ளது. ஹரியானா ரோட்வேஸ் பேருந்து அதிவேகமாக வந்ததால் அந்த பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். பேருந்தில் அதிக சுமையை ஏற்றியது மற்றும் சாலையின் மோசமான நிலை ஆகியவையும் இந்த விபத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அந்த பேருந்தில் சுமார் 70 குழந்தைகள் இருந்ததாக சாட்சியாளர் ஒருவர் கூறியுள்ளார். காயமடைந்தவர்கள் பிஞ்சோர் மருத்துவமனை மற்றும் நகரில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும், ஆபத்தான நிலையில் உள்ள ஒரு பெண் பயணி, பிஜிஐ சண்டிகருக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

40 பள்ளி மாணவர்கள் காயம்