
பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் காயம்
செய்தி முன்னோட்டம்
பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள ஒரு ஹோட்டலில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் ஏற்பட்ட இந்த வெடிவிபத்துக்கான காரணம் என்ன என்பதை கண்டறிய போலீசார் முயற்சித்து வருகின்றனர்.
காயமடைந்தவர்களில் 3 பேர் அந்த ஹோட்டலிலேயே பணிபுரிந்து வந்த ஊழியர்கள் ஆவர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இது ஷார்ட் சர்க்யூட்டால் ஏற்பட்ட விபத்தா அல்லது கேஸ் சிலிண்டர் வெடித்ததா என்பதை ஆரம்ப விசாரணையில் கண்டறிய முடியவில்லை.
வெடிவிபத்திற்குப் பிறகு தீ எதுவும் பற்றி எரியவில்லை என்பதால், இது சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது போல் தெரியவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எரிவாயு குழாய் கசிவு ஏற்பட்டதா என போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
பெங்களூரில் வெடி விபத்து
#Bengaluru pic.twitter.com/4EYBc92Aj4
— NDTV (@ndtv) March 1, 2024