Page Loader
பிரயாக்ராஜில் நடந்த மகாகும்ப கூட்ட நெரிசலில் 30 பேர் பலி, 60 பேர் காயம்; உ.பி. காவல்துறை தகவல்
பிரயாக்ராஜில் நடந்த மகாகும்ப கூட்ட நெரிசலில் 30பேர்

பிரயாக்ராஜில் நடந்த மகாகும்ப கூட்ட நெரிசலில் 30 பேர் பலி, 60 பேர் காயம்; உ.பி. காவல்துறை தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 29, 2025
07:35 pm

செய்தி முன்னோட்டம்

புதன்கிழமை (ஜனவரி 29) அதிகாலையில் பிரயாக்ராஜில் உள்ள மகாகும்பத்தில் நடந்த ஒரு சோகமான கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60 பேர் காயமடைந்தனர். தை அமாவாசை புனித நீராடுவதற்கு ஏராளமான மக்கள் கூடியிருந்த சங்கம் பகுதியில் அதிகாலை 1-2 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. கர்நாடகா, அசாம் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த பக்தர்கள் உட்பட இறந்தவர்களில் 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டிஐஜி (மகாகும்ப் நகர்) வைபவ் கிருஷ்ணா உறுதிப்படுத்தினார். காயமடைந்த யாத்ரீகர்கள் உள்ளூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் உதவிக்காக ஹெல்ப்லைன் எண் (1920) வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, கூட்ட நெரிசல் காரணமாக அகடா பகுதியைச் சுற்றியுள்ள தடுப்புகள் இடிந்து விழுந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

பிரதமர் வருத்தம்

பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார், உதவி வழங்குவதாக உறுதி

இந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரயாக்ராஜ் நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக உறுதியளித்தார். எக்ஸ் தளத்தில் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், இறந்த குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினார். நிலைமை குறித்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறினார். மகா கும்ப மேளாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்னும் கூடியுள்ள நிலையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், மேலும் அசம்பாவிதங்களைத் தடுக்கவும் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.