
இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் தஹாவூர் ராணாவை 18 நாள் காவலில் எடுத்தது NIA
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தஹாவூர் ராணாவை NIA காவலில் 18 நாள் வைக்க சிறப்பு NIA நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
2008 மும்பை தாக்குதலில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட ராணா, நேற்று மாலை 6.30 மணியளவில் சிறப்பு விமானத்தில் டெல்லி வந்தார்.
அவர் இந்தியாவில் தரையிறங்கியதும் அவரை NIA கைது செய்தது.
அதிகாரபூர்வ அறிக்கையில் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) அவரது கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தி,"தேவையான அனைத்து சட்ட நடைமுறைகளையும் முடித்த பிறகு, விமானத்தில் இருந்து வெளிவந்த சிறிது நேரத்திலேயே, பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த கனடிய நாட்டவரான ராணாவை கைது செய்தது" தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாடுகடத்தல், 166 பேர் கொல்லப்பட்ட 26/11 தாக்குதல்கள் தொடர்பான இந்தியாவின் விசாரணையின் ஒரு பகுதியாகும்.
காவல்
கைதானதும் இரவோடு இரவாக காவலில் எடுக்கப்பட்ட ராணா
கைதிற்கு பிறகு, வியாழக்கிழமை இரவு டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் சிறப்பு NIA நீதிபதி முன் ராணா ஆஜர்படுத்தப்பட்டார்.
மின்னஞ்சல்கள் உள்ளிட்ட ஆதாரங்களை ஆதாரமாகக் கொண்டு, NIA ராணாவை 20 நாள் காவலில் வைக்கக் கோரியது.
மேலும், பயங்கரவாத செயல்களைச் செய்ய மற்ற சதிகாரர்களுடன் ராணா குற்றவியல் சதியில் ஈடுபட்டதாக NIA கூறியது.
அவரது கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் 18 நாள் காவலுக்கு உத்தரவிட்டது.
தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், அங்கு அவர் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டுள்ளன.
ராணா நாடு கடத்தப்படுவதைக் கருத்தில் கொண்டு மத்திய சிறையைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாடுகடத்தல்
லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து நாடுகடத்தப்பட்ட ராணா
லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சிறப்பு விமானத்தில் மூத்த அதிகாரிகள் அடங்கிய தேசிய பாதுகாப்பு காவல்படை (NSG) மற்றும் NIA குழுக்களால் ராணா புது டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார்.
வியன்னாவை தளமாகக் கொண்ட ஒரு சார்ட்டர் சேவையிலிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட கல்ஃப்ஸ்ட்ரீம் G550 ஜெட் விமானத்தைப் பயன்படுத்தி இந்த நாடுகடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஜெட் விமானம் புதன்கிழமை அமெரிக்காவிலிருந்து புறப்பட்டது. அதே நாளில் இரவு 9.30 மணிக்கு ருமேனியாவின் புக்கரெஸ்டில் தரையிறங்கியது.
விமானம் ருமேனிய தலைநகரில் கிட்டத்தட்ட 11 மணி நேரம் நின்றது.
பின்னர் அதன் நீண்டதூர பயணத்தின் இறுதிப் கட்டத்தை மீண்டும் தொடங்கியது.
வியாழக்கிழமை காலை 8.45 மணிக்கு (IST) கல்ஃப்ஸ்ட்ரீம் புக்கரெஸ்டிலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணியளவில் டெல்லியில் தரையிறங்கியது.